மன்னர் சார்லஸ் தனது ஆட்சியைத் தொடங்குவதற்காக உலகெங்கிலும் அரச குடும்பத்தின் மிகப்பெரிய சுற்றுப்பயணங்களின் ஒரு பகுதியாக நியூசிலாந்துக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

இந்த பயணங்கள் "நட்பு மற்றும் ஆதரவின் கரத்தை நீட்டுவதை" இலக்காகக் கொண்ட சர்வதேச பயணம் என்று அரச வட்டாரங்கள் பிரிட்டிஷ் மிரருக்கு தெரிவித்தன.

நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கரீபியிலுள்ள பல காமன்வெல்த் நாடுகள் மன்னரின் முன்னுரிமை பட்டியலில் முதலிடத்தில் உள்ளன என்று‌ பிரிட்டிஷ் மிரர் தெரிவித்துள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா மற்றும் கனடா உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கு முடிந்தவரை விரைவில் வருகை தருவது குறித்து அரசர் தனது தலைமை ஆலோசகர்களுடன் கலந்துரையாடியதாகக் கூறப்படுகிறது.

அவர் அரசராக இருக்கும் மற்ற 14 நாடுகளுக்குச் செல்வதன் முக்கியத்துவத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார் என கூறப்பட்டுள்ளது.

*இந்த தகவல் New Zealand Herald இல் வெளிவந்தது ஆகும்.