Hastings புறநகர்ப் பகுதியான Flaxmere இல் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட இருவரில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி அன்று Ramsay Crescent இல் உள்ள ஒரு வீட்டில் வெளியே இடம்பெற்ற குறித்த சம்பவத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்ட நிலையில் அதிகாரிகள் அங்கு பலத்த காயமடைந்த இரண்டு நபர்களை மீட்டனர்.

இதனையடுத்து அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் அதிகாரிகள் இச் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டாவது நபரான 19 வயது இளைஞரை Flaxmere இல் உள்ள ஒரு வீட்டில் கைது செய்தனர்.

அந்த நபர் நாளை Hastings மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.