இரண்டாவது முறையாக வெலிங்டன் நகர கவுன்சிலர் லாரி ஃபூனை நகரின் புதிய துணை மேயராக தெரிவு செய்துள்ளார் வெலிங்டன் மேயர் டோரி வனாவ்.

"லாரி மீது எனக்கு 100 சதவீத நம்பிக்கை உள்ளது. அவளுடைய கருணை மற்றும் நேர்மையின் அடிப்படையில் கவுன்சிலர்களின் மரியாதை அவளுக்கு உள்ளது" என மேயர் டோரி வனாவ் தெரிவித்தார்.

மேலும் இந்த பதவி உயர்வு எதிர்பாராதது என்றும், அந்த பாத்திரத்தைப் பற்றி சிந்திக்க சிறிது நேரம் எடுத்துக் கொண்டதாகவும் லாரி ஃபூன் கூறினார்.

ஆனால் நகரத்திற்கு சேவை செய்வதற்கு இது ஒரு அற்புதமான வழியாக தான் உணர்வதாக தெரிவித்தார்.

இதனிடையே அக்டோபர் 26 ஆம் திகதி அன்று Whanau மற்றும் Foonக்கான அதிகாரப்பூர்வ பதவியேற்பு விழா நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.