அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் இந்திய நேரப்படி இரவு பத்து மணிக்கு அதிகாரபூர்வமாக பதவியேற்கிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவியேற்கிறார்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. ஜனநாயகக் கட்சியின் சார்பில் களமிறங்கிய ஜோ பைடன் அதிபராகவும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் வெற்றியை அறுவடை செய்தனர். இதன் தொடர்ச்சியாக, இன்று முறைப்படி பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

தலைநகர் வாஷிங்டனில், அமெரிக்க நாடாளுமன்றம் கூடும் கேப்பிடல் கட்டடத்துக்கு முன்பு விழா நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு பத்து மணிக்கு விழா தொடங்குகிறது. முதலில் தொடக்க உரைகள் இடம்பெறும். இதைத் தொடர்ந்து, கமலா ஹாரிஸ் உறுதிமொழி ஏற்று, துணை அதிபராக பதவிப்பிரமானம் எடுத்துக் கொள்கிறார். பத்தரை மணிக்கு ஜோ பைடன் பதவியேற்று, நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்.