சென்னை அணிக்கு ரூ.4 கோடிக்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய வீரர் ஷிவம் துபேவுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் 2 நாள் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று தொடங்கியது. ஏலப்பட்டியலில் முதலில் 590 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். கடைசி நாளில் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் ஆடிய 10 வீரர்கள் சேர்க்கப்பட்டதால் இந்த எண்ணிக்கை 600 ஆக உயர்ந்தது.

இதில் 377 பேர் இந்தியர்கள் ஆவர். போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் தங்களிடம் இருந்த இருப்புத்தொகைக்கு ஏற்ப கணக்கு போட்டு வீரர்களை ஏலத்தில் ஆர்வமுடன் எடுத்தனர்.

எதிர்பார்க்கப்பட்டது போலவே இந்திய இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன், வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர், ஆல்-ரவுண்டர் ஷா்துல் தாக்குர் ஆகியோருக்கு கடும் கிராக்கி காணப்பட்டது. தீபக் சாஹரைத் தக்கவைத்துக் கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.14 கோடி வழங்கியது

எனினும், அதை பின்னுக்குத் தள்ளி மும்பை இந்தியன்ஸ் அணி இஷான் கிஷனுக்காக ரூ.15.25 கோடியை வாரி வழங்கியது.

இந்நிலையில் 15 வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் 2 நாள் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதில் இந்திய வீரர் ஷிவம் துபேவை ரூ.4 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது.  இந்நிலையில் சென்னை அணிக்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய வீரர் ஷிவம் துபேவுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ள சம்பவம் அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.