இரண்டாம் உலக போருக்கு பிறகு தற்போதைய காலகட்டத்தில் தான் இந்திய பெருங்கடல் பகுதியில் அதிகளவில் போர் கப்பல்கள் குவிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எந்த நேரத்திலும் இந்திய பெருங்கடல் பகுதியில் சுமார் 125 போர் கப்பல்கள் உள்ளதாகவும் இது இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு ஆஃப்கானிஸ்தான் படையெடுப்பின் போது நிறுத்தப்பட்டு இருந்த போர் கப்பல்களின் எண்ணிக்கையை விடவும் மூன்று மடங்கு அதிகமாகும்.

மேலும் இந்திய கடற்படை இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள ஹோர்மூஸ் ஜலசந்தி, பாப் எல் மான்டெப் ஜலசந்தி, மொசாம்பிக் ஜலசந்தி, மலாக்கா ஜலசந்தி மற்றும் சுந்தா ஜலசந்தி ஆகிய பகுதிகளில் எப்போதும் போர் கப்பல்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த போர் கப்பல்கள் குவிப்பிற்கு நாளுக்கு நாள் இந்திய பெருங்கடல் பகுதியில் அதிகரித்து வரும் சீனாவின் அடாவடி போக்கு மற்றும் அச்சுறுத்தல்கள் ஆகியவை காரணம் என்றால் மிகையல்ல.