அமெரிக்க மக்களை ஜோ பைடன் முட்டாள்களைப் போல நடத்தி வருகிறார் என டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ. எலோன் மஸ்க் கடுமையாக சாடியுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களான, 'ஜெனரல் மோட்டார்ஸ், போர்டு மோட்டார்' ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன், அதிபர் ஜோ பைடன் நேற்று முன்தினம் கலந்து உரையாடினார்.

இதன்போது நாட்டின் வளர்ச்சிக்கு கார் தயாரிப்பு துறைகளின் பங்களிப்பு குறித்தும் மின்சார வாகனங்களுக்கான எதிர்காலம் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இச் சந்திப்பின் போது பிரபல மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் சி.இ.ஓ. எலோன் மஸ்கிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை

கலந்துரையாடலின் பின்னர் அதிபர் ஜோ பைடன் கூறுகையில் ''அமெரிக்காவில்‌ ஜெனரல் மோட்டார்ஸ், போர்டு போன்ற நிறுவனங்கள், முன்பைவிட, தற்போது அதிக எண்ணிக்கையிலான மின்சார வாகனங்களை தயாரித்து வருகின்றன" என தெரிவித்தார்.

பைடனின் பேச்சால் ஆத்திரமடைந்த எலோன் மஸ்க், அவரை கடுமையாக சாடி உள்ளார்.

இது குறித்து அவர் நேற்று கூறுகையில் “ஜோ பைடன் ஒரு பொம்மை மனிதர். அவர் அமெரிக்க மக்களை முட்டாள்களைப் போல நடத்தி வருகிறார்" என சாடினார்.

முன்னதாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஜோ பைடன் நிர்வாகம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாக எலோன் மஸ்க் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.