கொழும்பின் அனைத்து பகுதிகளிலும் துரித அன்டிஜென் சோதனையை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சை சேர்ந்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பின் ஆபத்து குறைந்த ஆபத்து மிகவும் குறைவாக காணப்படுகின்ற பகுதிகளில் துரித அன்டிஜென் பரிசோதனைகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை சுகாதார பணியாளர்கள் ஆரம்பித்துள்ளனர் என தெரிவித்துள்ள சுகாதார அமைச்சை சேர்ந்த அதிகாரி கொழும்பிலேயே அதிகளவு நோயாளர்கள் இனம் காணப்படுவதால் அடையாளம் காணப்படாத கொத்தணியை இனம் காண்பதற்காகவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் ஆபத்தான பகுதிகள் அனைத்தும் தற்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது சுகாதார துறையினர் பொதுமக்கள் வாழும் பகுதிகள் உட்பட ஆபத்து குறைவான பகுதிகளை நோக்கி தங்கள் கவனத்தை திருப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்மாடிகள் போன்றவற்றில் நாளாந்தம் ஆன்டிஜென் சோதனைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.ஆபத்து குறைவான பகுதிகளிற்கு செல்லும் போது சுகாதாரபிரிவினர் ஒவ்வொரு குடுமபத்திலும் ஒருவருக்கு அன்டிஜென் சோதனையை மேற்கொள்வார்கள் அதற்கான வேண்டுகோளை விடுப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அதன்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் என எவராவது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த பகுதியை சேர்ந்த அனைவரும் பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.கொழும்பில் தற்போது 6 குழுக்கள் பிசிஆர் சோதனையை மேற்கொள்கின்றன ஒவ்வொரு பகுதியிலும் 250 சோதனையை மேற்கொள்ளவுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.