இலங்கை பல்கலைக்கழக எழுதுவினைஞர், முகாமைத்துவ உதவியாளர், தொழிற்துறை சேவைகள் சங்கம், கொவிட் நிதியத்திற்காக 1.28 மில்லியன் ரூபாய் நன்கொடையை கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் நேற்று (2020.12.29) வழங்கியது.

இந்நாட்டு கொவிட் நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக திரட்டப்பட்ட நிதியை இலங்கை பல்கலைக்கழக எழுதுவினைஞர், முகாமைத்துவ உதவியாளர், தொழிற்துறை சேவைகள் சங்க பிரதிநிதிகள் விஜேராமவிலுள்ள கௌரவ பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து வழங்கிவைத்தனர்.

இச்சங்கங்களின் பிரதான தலைவர் தம்மிக எஸ் பிரியந்த அவர்களினால் இந்நிதி கௌரவ பிரதமரிடம் வழங்கிவைக்கப்பட்டது.

குறித்த சந்தர்ப்பத்தில் கௌரவ அமைச்சர் காமினி லொகுகே, தலைமை செயலாளர் எஸ்.ஜே.நல்லகே, தலைமை பொருளாளர் லக்ஷ்மன் அதிகாரி உள்ளிட்ட பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.