கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்கள் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை,  இன்று(30) சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது.

கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை தகனம் செய்வதா அல்லது அடக்கம் செய்வதா என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சம்ர்பிப்பதற்காக, சுகாதார அமைச்சினால் 9 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது.

மேற்படி குழுவின்  அறிக்கை மீளாய்வு செய்யப்பட்டு இறுதி தீர்மானம் எடுக்கப்படும் வரை, கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் சடலங்கள் தகனம் செய்யப்படுமென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் சடங்கள் குறித்து நாட்டில் போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

ஒரு தரப்பு தகனத்தை வலியுறுத்தியும் ஒரு தரப்பு அடக்கம் செய்ய அனுமதி கோரியும் போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.