ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் பல மாகாணங்களில் கோவிட் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகின்றமையினால் கொரோனா கட்டுப்பாடுகளின் ஓர் அங்கமாக விமானங்கள் இரத்து செய்யப்படுகின்றன.

இதனால் கிறிஸ்மஸ் விடுமுறைக்காக வெளியூர் சென்ற பல லட்சம் பேர் தங்கள் பணியிடம் உள்ள ஊர்களுக்கு திரும்ப முடியாத நிலையில் உலக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை முதல், உலகெங்கும் சுமார் 11,500 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், பல விமானங்களின் புறப்படும் நேரம் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

திங்கட்கிழமை மட்டும் சுமார் 3,000 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், செவ்வாய்க்கிழமையான நேற்றய தினம் 1100க்கும் அதிகமான விமானங்கள்  இரத்தாகியுள்ளதாக ஃப்ளைட்அவேர் எனும் விமானப் பயணம் குறித்த தகவல்களைத் தரும் இணையதளம் கூறுகிறது.