கோவில் திருவிழாவில் தகராறு செய்த வாலிபர்களுக்கு 100 திருக்குறள் எழுதவைத்து நூதன தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கோவை மதுக்கரை அடுத்த மரப்பாலம் பகுதியில் உள்ள அய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

அங்கு நடந்த ஜமாப் மேளத்திற்கு அப்பகுதி சிறுவர்கள் சிலர் நடனமாடிக் கொண்டிருந்தனர்.

நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறில் 10 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மதுக்கரை பொலிஸார் இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இந்நிலையில் ‌காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் அந்த சிறுவர்களை தலா 100 திருக்குறள்களை எழுதி, படிக்க வைத்து மனனம் செய்ய சொல்லி நூதன தண்டனை வழங்கியுள்ளார்.

இதையடுத்து அந்த சிறுவர்கள் அனைவரும் திருக்குறளை எழுதி காட்டியபின் அறிவுறை வழங்கி அனுப்பி வைக்கப்பட்டனர்.