சென்னையில் 14வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.96க்கும், டீசல் ரூ.93.26க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.,

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.

இதனையடுத்து, எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையை நிர்ணயித்து விற்பனை செய்யும் நடைமுறையை கடைப்பிடித்து வருகின்றன.

ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டது.  தமிழகத்திலும் பெட்ரோல் விலை ரூ.100க்கும் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டது அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பெட்ரோல் விலையை ரூ.3ஆக குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. 

இந்நிலையில், சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வைளியாகியுள்ளன.

இதன்படி, சென்னையில் 14வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.98.96க்கும், டீசல் விலை ரூ.93.26க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.