பூமியிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் எறும்பு, அவகாடோ பழம் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட எலான் மஸ்க்குக்கு  சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் Falcon ராக்கெட் மூலம் 2 ஆயிரத்து 170 கிலோவுக்கு மேலான பொருட்கள் அனுப்பப்பட்டன.

அவகாடோ, எலுமிச்சம்பழம், ஐஸ்கிரீம் உள்ளிட்ட உணவு பொருட்களும், விண்வெளியில் சோதனை செய்ய எறும்பு, இறால் , சோலார் செல், சில தாவரங்கள் உள்ளிட்டவையும், ஜப்பான் தனியார் நிறுவனத்தின் மனித கை வடிவிலான ரோபோட்டிக் இயந்திரம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.