அமெரிக்க இராணுவத்தின் இறுதி விமானம் ஆப்கானிஸ்தான் தலைநகரை விட்டு வெளியேறியுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேற தாலிபான்கள் விதித்த கெடு இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையிலேயே, அமெரிக்க இராணுவத்தின் இறுதி விமானம் காபூலை விட்டு வெறியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆகஸ்ட் 14ம் திகதி முதல் காபூலில் இருந்து 6,000 அமெரிக்க குடிமக்கள் உட்பட 79,000 பேரை அமெரிக்கா வெளியேற்றியதாக அமெரிக்க மத்திய கட்டளையின் தளபதி ஜெனரல் கென்னத் மெக்கென்சி தெரிவித்துள்ளார்.பென்டகனில் நடந்த செய்தியாளர் மாநாட்டின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.