சுவிட்சர்லாந்து உட்பட உலகின் அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை வளர்க்கவே விரும்புவதாக தாலிபான்களின் முதன்மை தலைவர்களில் ஒருவரான அப்துல் கஹார் பால்கி தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டை இரண்டாவது முறையாக தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அச்சத்தில் வெளியேறி வருகின்றனர்.

தாலிபான்கள் ஒருபோது சொந்த நாட்டவர்களை மிரட்டியதில்லை என குறிப்பிட்டுள்ள அவர், தங்கள் மீதான அச்சம் என்பது முற்றிலும் ஆதாரமற்றது என்றார். சொந்த நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தாலிபான்களின் கடைமை என்றும் அவர் கூறியுள்ளார்.