தனது காதலி இலோனாவை காரின் மேல் கயிறால் கட்டி வைத்து கொண்டு ரோட்டில் கார் ஓட்டி சென்று உள்ளார் ரஷ்யாவை சேர்ந்த நபர் ஒருவர். 

செர்ஜி கோசென்கோ என்ற இவர் சமூக ஊடக பிரபலம். தனது காதலியுடன்  இணைந்து பலவேறு வித்தியாசமான் புகைப்படங்கள் , வீடியோக்கள் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிடுவது வழக்கம். இவர் சமீபத்தில் தனது காதலியுடன் இணைந்து எடுத்த வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.

குறிப்பாக, சமூக வலைத்தளத்தில் கிட்டதட்ட அவருக்கு 50 லட்சம் பின் தொடர்பவர்கள் உள்ளனர். இந்த வீடியோவை “Trust Test” என்று குறிப்பிட்டு, இந்த வீடியோவை தன்னுடைய சமூக ஊடகத்தின் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

தனது காதலி இலோனாவை காரின் மேல் கயிறு கொண்டு கட்டி வைத்து கொண்டு ரோட்டில் கார் ஓட்டி சென்று உள்ளார். இருவரும் கைகளில் விலங்கு மாட்டி உள்ளனர். 

இந்த வீடியோவானது, பலரது கவனத்தையும் பெற்றுள்ள நிலையில், பலரும் இந்த செயலுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

ஒருவர் "உண்மையைச் சொல்வதானால், இதில் என்ன வேடிக்கை இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் எல்லோரும் அதை அனுபவித்து பார்க்கிறார்கள்.இது உங்கள் சொந்த குழந்தைகளுக்கு நீங்கள் வைத்த முன்மாதிரியா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், இந்த வீடியோ அந்நாட்டின் போக்குவரத்து போலீசாரின் கவனத்திற்கும் சென்றதும் இந்த வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த நபரை கண்டுபிடித்து, சாலை விதிகளை மீறிய குற்றத்திற்காக அவருக்கு இந்திய மதிப்பில் ரூ.760  அபராதம் விதித்தனர்.

முக்கியமாக, அந்நாட்டின் சிறுவர் சிறுமிகளுக்கு இந்த செயல் ஒரு தவறான முன்னுதாரணமாக இருப்பதாகவும், அந்நாட்டின் சமூக ஆர்வலர்கள் பலரும் கன்டனம் தெரிவித்து வருகின்றனர்.