இந்திய தொலைக்காட்சி ஒன்றில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள மாஸ்டர் செஃப் என்ற சமையல் நிகழ்ச்சியை தமன்னா தொகுத்து வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியின் தெலுங்கு ப்ரொமோ சூட்டிங்கில் கலந்து கொண்டபோது விஜய் சேதுபதியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் தமன்னா.