இந்தியாவின் ஜம்மு விமானநிலையத்தில் ஆளில்லா விமானதாக்குதலே இடம்பெற்றிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் இராணுவதளமொன்றின் மீது இடம்பெற்றுள்ள முதலாவது ஆளில்லா விமானதாக்குதல் இதுவாகயிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாக்கிஸ்தான் எல்லையிலிருந்து 16 கிலோமீற்றர் தொலைவில் கடும் பாதுகாப்புகளிற்கு மத்தியில் அமைந்துள்ள விமானதளத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் இரண்டு விமானப்படையினர் காயமடைந்துள்ளனர்.

ஜம்மு விமானதளத்தில் இடம்பெற்ற இரு  தாக்குதலிலும் டிரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் வெடிக்கவைப்பதற்கான குண்டுகளை விநியோகிப்பதற்கு லக்சர் இ தொய்பா அமைப்பு ஆளில்லா விமானங்களை பயன்படுத்துகின்றது என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெடிகுண்டு தாக்குதலை மேற்கொள்வதற்கு ஆளில்லா விமானங்களை பயன்படுத்தியுள்ளனர் தரித்து நின்ற விமானமொன்றையே அவர்கள் இலக்குவைத்திருக்கலாம் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளனர்.