வெளியில் உள்ள வெப்ப அளவை விட காருக்குள் சுமார் 50 டிகிரி வரை அதிக வெப்பம் இருக்க வாய்ப்புள்ளது. இதனால் நீங்கள் காரில் ஏறியதும் முதலில் ஏசியை ஆன் செய்யாமல் அனைத்து ஜன்னல்களையும் இறக்கிவிட்டு விட்டு முதல் ஒரு நிமிடம் ஏசியை போடாமல் பயணம் செய்தால் வெளியில் உள்ள வெப்பத்தின் அளவும் காருக்கு உள்ளே உள்ள வெப்பத்தின் அளவும் ஒரே சீராக நிலைக்கு வரும். அதன் பின் ஏசி யை ஆன் செய்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.