வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களின்படி சீனாவின் பேரரசி வூ, தான் வாழ்ந்த சகாப்தத்தின் பணக்காரப் பெண்ணாக கருதப்படுகிறார். சில வரலாற்று ஆசியர்கள் இதுவரை வாழ்ந்தவர்களிலேயே பெரும் பணக்காரப் பெண் என்றால் அது சீனாவின் பேரரசி வூ, தான் என்று குறிப்பிடுகின்றனர்.

பேரரசி வூ-வின் மொத்த சொத்து மதிப்பு 16 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, உலக பெரும் பணக்காரர்களாக கருதப்படும் எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ், முகேஷ் அம்பானி போன்ற பெரும் பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பை சேர்த்தாலும் பேரரசி வூ வின் சொத்துக்கு நிகராகதாம்.  

எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 229 பில்லியன் அமெரிக்க டொலர்கள், ஜெஃப் பெசோஸ் சொத்து மதிப்பு 174 பில்லியன் டொலர்கள் மற்றும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் 106.2 பில்லியன் டொலர் ஆகியோரின் சொத்துமதிப்பை முறியடித்துள்ளது பேரரசி வூ வின் சொத்து மதிப்பு.

டாங் வம்சத்தைச் சேர்ந்த பேரரசி வூ ஒரு புத்திசாலி ஆட்சியாளர் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். தனது ஆட்சி மற்றும் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள பல்வேறு உத்திகளைக் கையாண்டார் என்றும் கூறப்படுகிறது,

மேலும் தனது பதவியைப் பாதுகாக்க தனது சொந்த குழந்தைகளை நாடு கடத்துவது போன்ற கடுமையான நடவடிக்கைகளை வூ மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.