2024 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா என்ற பெண் வென்றுள்ளார். மேலும், இந்த ஆண்டு உலக அழகிப் போட்டியில் லெபனான் நாட்டைச் சேர்ந்த யாஸ்மினா ஸைத்தோன் முதல் ரன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

71வது உலக அழகிப் போட்டி மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்றது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடக்கும் உலக அழகிப் போட்டி இதுவாகும்.

இந்த போட்டியில் செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா என்ற பெண் உலகி அழகியாக அறிவிக்கப்பட்டார். கிறிஸ்டினா பிஸ்கோவா115 நாடுகளைச் சேர்ந்த அழகிகளை எதிர்த்து போட்டியிட்டுள்ளார்.

24 வயதாகும் கிறிஸ்டினா பிஸ்கோவா, மாடலாக இருந்து கொண்டே, சட்டம் மற்றும் வணிக நிர்வாகம் ஆகிய இரண்டிலும் பட்டப்படிப்பை படித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.