‘கங்குவா’ படத்தை முடித்துவிட்ட நடிகர் சூர்யா அடுத்து, சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிக்கிறார். சூர்யாவின் 43-வது படமான இதை, 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் துல்கர் சல்மான், நஸ்ரியா, இந்தி நடிகர் விஜய் வர்மா உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். இது அவரின் நூறாவது படம்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்திய பீரியட் படம் இது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் 2-வது வாரம் மதுரையில் தொடங்குகிறது.

இதற்கிடையே ஹரியாணாவில் சுதா கொங்கரா டீம் சில லொகேஷன்களை தேர்வு செய்துவிட்டு வந்துள்ளது. அங்குள்ள ரேவாரியில் முக்கிய காட்சிகளைப் படமாக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.