இலங்கை

இலங்கையில் விட்டு வெளியேறும் தொழில் வல்லுநர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள தரவுகளில், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளுக்கு தொழிலுக்காகச் செல்லும் இலங்கையர்களில் 41 சதவீதமானவர்கள் தொழில் வல்லுநர்கள் அல்லது ஏதோ வகையில் திறமைமிக்கவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதுடன், 2023ஆம் ஆண்டில் மாதாந்தம் வெளிநாடு சென்றோரின் எண்ணிக்கை 25,000ஆக உயர்ந்துள்ளது. இதன்படி, ஒரு வருடத்தில் சுமார் 3 இலட்சம் இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர் அல்லது வேலைக்காக வெளிநாடு செல்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.