இலங்கை
இலங்கை விமான நிலையங்களின் நிர்வாகத்தை இந்தியாவின் அதானி குழுமத்திடம் ஒப்படைக்க வாய்ப்புள்ளதாக வெளியான தகவல்கள் பொய்யானவை என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் அதுல கல்கெட்டிய தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் முன்னணி விமான நிலையமான கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) உட்பட மூன்று இலங்கை விமான நிலையங்களின் நிர்வாகத்தை இந்தியாவின் அதானி குழுமத்திடம் இலங்கை ஒப்படைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் சமீபத்திய செய்திகள் பொய்யானவை.
அத்தகைய பேச்சுக்கள் எதுவும் நடைபெறவில்லை. விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் என்ற வகையில், அத்தகைய கலந்துரையாடல் பற்றி எனக்குத் தெரியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.