இலங்கை

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு எதிர்வரும் பண்டிகை காலத்தில் தலா 20 கிலோகிராம் அரிசி நிவாரணமாக வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையுடன் நேற்று (07) ஆரம்பமானது. கொள்கை பிரகடன உரையிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.  

கடந்த ஆண்டு காணப்பட்ட பொருளாதார நிலைமை, தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி விளக்கமளித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் பண்டிகை காலத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தலா 20 கிலோகிராம் அரிசி, நிவாரணமாக வழங்கப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.