துல்கர் சல்மான், ரித்து வர்மா ஆகியோர் நடிப்பில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்னும் படத்தை இயக்கியவர் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி. இப்போது நடிகர் சிம்புவை வைத்த அவரது இரண்டாவது படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படம் நடிகர் சிம்புவின் 48வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்புவின் இந்த 48வது படம் பீரியாடிக் படமாக உருவாகவிருப்பதாக தேசங்கு பெரியசாமி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

மேலும் இந்த படத்தை உலகநாயகன் கமல்ஹாசன் அவரது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.

எஸ்.டி.ஆர் 48 படத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என தகவல் வெளியானது. மேலும், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் சிம்புவுடன் ஜோடி சேர்ந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இப்போது தமிழில் ஜெயம் ரவியுடன் சைரன், ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி ஆகிய படங்களை லைன் அப்பில் வைத்திருக்கும் கீர்த்தி சுரேஷ் சிம்புவின் 48வது படத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எஸ்.டி.ஆர் 48 படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவிருக்கிறது. தற்போது படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. இந்த படத்தில், சிம்பு ஹீரோ மற்றும் வில்லன் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பை அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கி 2025 கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்களாம்.

கன்னட படமான கே ஜி எஃப் படத்தின் இசையமைப்பாளரான ரவி பாஸ்ரூர் STR 48 படத்திற்கு இசையமைப்பார் எனவும் கூறப்பட்டிருக்கிறது. கே ஜி எஃப் படத்தின் இசைபோலவே இந்த படத்திற்கு தரமான இசையை கொடுக்க பிளான் போட்டிருக்கிறார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை தயாரிப்பு நிறுவனம் ஒவ்வொன்றாக வெளியிடும் எனவும் கூறப்பட்டிருக்கிறது.