இலங்கை

தற்போது ஆரம்பிக்கப்பட்டு அபிவிருத்திப் பணிகள் நிறைவடையாத நெடுஞ்சாலைகளின் அபிவிருத்திக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கடனுதவியைப் பெற இலங்கை திட்டமிட்டுள்ளது.

இரண்டாவது ஒருங்கிணைந்த சாலை முதலீட்டுத் திட்டத்தின் கீழ் கடன் தொகையைப் பெற அதற்கான ஏற்பாடுகளை இலங்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தம் நேற்று (28) கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் நிதியமைச்சின் செயலாளர் கே.எம். மகிந்த சிறிவர்தன, இலங்கை அரசாங்கம் மற்றும் நாட்டின் பணிப்பாளர் சார்பாக, ADB Sri Lanka Resident Mission, Takafumi Kadono  நேற்று கைச்சாத்திட்டுள்ளனர்.