பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த ஐம்பது நாட்களாக ஸ்வாரஸ்யமான சென்றுகொண்டு இருக்கின்றது. கடந்த அக்டோபர் 1 ஆம் திகதி துவங்கிய இந்நிகழ்ச்சியில் சண்டைகள் சர்ச்சைகள் என விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் சென்றுகொண்டு இருக்கின்றது. மற்ற சீசன்களில் நடக்காத சில நிகழ்வுகள் இந்த சீசனில் நடந்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா ஆகியோர் வந்திருந்தனர். பார்க்கிங் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக இவர்கள் பிக் பாஸ் இல்லத்திற்கு வந்திருந்தனர்.

மேலும் ஒரு நாள் போட்டியாளர்களுடன் இவர்கள் தங்கியும் இருந்தார்கள். இதையடுத்து நடிகை இந்துஜா பூர்ணிமாவின் நெருங்கிய தோழியாம். இருவரும் கல்லூரியில் ஒன்றாக படித்துள்ளார். அப்போதில் இருந்தே இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். ஆனால் இந்துஜா வீட்டிற்கு வந்ததும் பூர்ணிமாவிடம் அவ்வளவாக பேசவில்லையாம்.

அவர் தனக்கு நெருங்கிய தோழி என்பதை வெளியே காட்டிக்கொள்ளாமல் யாரோ மாதிரி பேசினாராம். இதனால் தான் அப்சட்டாக இருப்பதாக பூர்ணிமா கூறி வருகின்றார். மேலும் இந்துஜா ஏன் இவ்வாறு செய்தார் என எனக்கு புரியவில்லை என்று கூறிய பூர்ணிமா, நானாக இருந்திருந்தால் இதுபோல செய்திருக்க மாட்டேன். என் முகத்தை பார்த்துகூட இந்துஜா சரியாக பேசவில்லை என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் பூர்ணிமா.

இதைப்பார்த்த ரசிகர்கள் ஒரு சிலர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை தான் பூர்ணிமா விமர்சித்து வந்தார் என்று பார்த்தல் சிறப்பு விருந்தினரையும் பூர்ணிமா விமர்சிக்கின்றாரே என கூறி வருகின்றனர். ஆனால் தன் நெருங்கிய தோழி என்னை கண்டுகொள்ளவில்லையே என்ற ஆதங்கத்தில் பூர்ணிமா இவ்வாறு பேசியுள்ளார் என அவருக்கு ஒரு சிலர் சப்போர்ட் செய்தும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.