இலங்கை

இலங்கையில் எதிர்வரும் வருடத்திற்குள் 400 ஹெக்டேயர் கோப்பியை பயிரிட விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி, இதற்காக வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் இருந்து 400 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது பிரதான தோட்டப் பயிராக கோப்பி பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படாவிட்டாலும், வெளிநாட்டு சந்தையில் கோப்பிக்கான அதிக தேவையை கருத்திற்கொண்டு மீண்டும் கோப்பி செய்கையை தோட்டப் பயிராக பிரபலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதனால் ஒரு ஹெக்டேருக்கு 10 இலட்சம் ரூபா கோப்பி பயிர்ச்செய்கைக்காக வழங்கப்படும் எனவும் அதில் 50 வீதமான தொகை மீளப்பெறப்பட மாட்டாது எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

வரவு செலவுத் திட்ட ஆவணத்தின் ஊடாக 2024ஆம் ஆண்டுக்கான விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சினால் 96 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், அரேபிகா கோப்பி, ரோபஸ்டா கோப்பி, லைபெரிகா கோப்பி ஆகியவை இந்த நாட்டில் வளர்க்கப்படுகின்றன.

இவற்றில் அரேபிகா கோப்பி, மிகவும் பிரபலமான கோப்பி ரகமாகும், மேலும் அந்த கோப்பி சாகுபடிக்கு முன்னுரிமை அளிக்குமாறு ஏற்றுமதி வேளாண் துறைக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.