இலங்கை
நாட்டில், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் இரு மாத்திரைகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக தாய்மார்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதன்படி, கடந்த பல மாதங்களாக கல்சியம் மற்றும் விட்டமின் மாத்திரைகள் வழங்கப்படவில்லை என தாய்மார்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாத்திரைகள் சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களினால் வழங்கப்பட்டு வந்தன.
தற்போது, குறித்த மருந்துகளை வெளியிலிருந்து வாங்க வேண்டியுள்ளதாக தாய்மார்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதவிர கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க வழங்கப்படும் HPV தடுப்பூசியும் ஒரு வருடமாக கிடைக்கவில்லை என்றும் குறிப்பிடுகின்றனர்.