நடிகர் ஜெயம் ரவிக்கு ஜெயம் படத்தை தொடர்ந்து மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி. இந்தப் படத்தில் அம்மா மகனாக நடித்திருந்த ஜெயம்ரவி மற்றும் நதியாவின் கேரக்டர்கள் தற்போதும் ரசிகர்களின் பேவரிட்டாக அமைந்துள்ளது.

இந்தப் படத்தை மோகன் ராஜா இயக்கியிருந்தார். அவரது ஸ்கிரீன் ப்ளேவிற்கு இந்தப் படம் மிகப்பெரிய உதாரணமாக அமைந்தது. படம் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி படத்தின் ரீமேக்கான உருவாக்கப்ப்டடிருந்தாலும் படத்தில் தமிழ் ரசிகர்களை கவரும் வகையில் பல மாற்றங்களை செய்திருந்தார் மோகன் ராஜா.

தற்போது பிரபலமான பல படங்களின் இரண்டாவது பாகம் வெளியாகி வரும் சூழலில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகமும் வெளியாகுமா என்ற கேள்வி ரசிகர்களிடையே தொடர்ந்து எழுந்து வருகிறது. இந்நிலை இந்த கேள்விகளுக்கு தற்போது மோகன் ராஜா தன்னுடைய சமீபத்திய பேட்டியொன்றில் விளக்கம் அளித்துள்ளார். இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலையை தான் முடித்துவிட்டதாக அவர் கூறியுள்ளார். இந்தப் படத்தினை விரைவில் துவங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் நடிகை நதியா கேரக்டர் இடம்பெறாது என்றும் அவர் கூறியுள்ளார். ஜெயம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என அடுத்தடுத்து ரீமேக் படங்களையே இயக்கிவந்தார் மோகன் ராஜா. இதனால் ரீமேக் இயக்குநர் என்ற விமர்சனத்தையும் அவர் எதிர்கொண்டார். இந்நிலையில் தனி ஒருவன் என்ற படத்தின்மூலம் இந்த இமேஜை தகர்த்தார். இந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடித்த நிலையில் அடுத்ததாக தனி ஒருவன் 2 படத்தின் அறிவிப்பையும் மேற்கொண்டுள்ளார்.

தற்போது சில படங்களில் ஜெயம் ரவி கமிட்டாகி நடித்து வரும் நிலையில், இந்தப் படங்களை முடித்துவிட்டு தனி ஒருவன் 2 படத்தில் அவர் இணையவுள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி 2 படத்தை இயக்கவுள்ளதாக தற்போது அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார். படத்தின் இரண்டாவது பாகம் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது.