இலங்கை

இலங்கையில் கடந்த 10 மாதங்களுக்குள் 1250 தொழுநோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்களில் 14 வயதுக்குட்பட்ட 131 சிறுவர்கள் அடங்குகின்றன என அமைச்சின் தொழுநோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் பிரசாத் ரணவீர குறிப்பிட்டுள்ளார்.

5 அல்லது 7 வருடங்களுக்கு முன்னதாக தொழுநோய் பக்டீரியா தாக்கத்திற்குள்ளான நோயாளர்களே தற்போது அடையாளம் காணப்படுகின்றனர்.