'லியோ' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'தளபதி 68' படத்தில் நடித்து வருகிறார் விஜய். 'தளபதி 68' படப்பிடிப்பு துவங்கி மும்முரமாக நடந்து வருகிறது. இப்படத்தில் விஜய் அப்பா, மகனாக இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் டைம் டிராவல் பாணியில் இப்படம் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. வெங்கட் பிரபு டைம் லூப் பாணியில் 'மாநாடு' படத்தை இயக்கிய நிலையில் தற்போது டைம் டிராவல் பாணியில் 'தளபதி 68' படத்தினை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்திற்கான தலைப்பை படக்குழுவினர் முடிவு செய்து விட்டனராம். இந்த டைட்டில் வரும் புத்தாண்டு அன்று நள்ளிரவு 12.00 மணிக்கு வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் புத்தாண்டுக்கு ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் இருப்பது உறுதி ஆகியுள்ளது.

விஜய்யுடன் ஜெயராம், மைக் மோகன், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், யோகி பாபு, விடிவி கணேஷ், பிரேம்ஜி அமரன், வைபவ் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே 'தளபதி 68' படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர். மேலும், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் இப்படத்தில் நாயகிகளாக நடிக்கவிருக்கின்றனர். அத்துடன் நீண்ட கேப்பிற்கு பிறகு 'தளபதி 68' மூலமாக விஜய்க்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.