ஜி.வி. பிரகாஷ் குமார் சிறுவயதிலிருந்து இசை மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக இசையைக் கற்று இசையமைப்பாளராக அறிமுகமான நிலையில், டார்லிங் படத்தில் இருந்து ஹீரோவாகவும் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

சினிமாவில் பிசியாக இருந்தாலும் சமூக அக்கறை மீது அதிக அக்கறையை ஒரு சக மனிதனாக எப்போதுமே ஜி.வி. பிரகாஷ் வெளிப்படுத்தி வருகிறார். ஜல்லிக்கட்டு போராட்டம், நீட் என அனைத்துக்குமே குரல் கொடுத்து வரும் ஜி.வி. பிரகாஷ் உதவி என கேட்பவர்களுக்கும் உதவி செய்து வருகிறார்.

ஒரு வயதே ஆன சிறுவன் ஒருவனுக்கு சிறு மூளை அருகே கட்டி இருப்பதாகவும் அதற்காக உடனடியாக மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டும் என ரசிகர் ஒருவர் கோரிக்கை விடுத்த நிலையில், அதை பார்த்து துடித்துப் போன ஜி.வி. பிரகாஷ் தன்னால் முடிந்த உதவியை செய்கிறேன் என உதவியுள்ளார்.

உடனடியாக தனது கூகுள் பே மூலமாக 75 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பிய ஸ்க்ரீன் ஷாட்டை பதிவிட்டுள்ளார். அந்த குழந்தையின் சிகிச்சைக்கு ஜி.வி. பிரகாஷ் உதவிய நிலையில், அவரது ரசிகர்களும் உதவி வருகின்றனர். சீக்கிரமே சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த குழந்தை நலம் பெற வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.