நடிகர் மணிகண்டன், மீதா ரகுநாத், ரமேஷ் திலக் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து சமீபத்தில் வெளியானது குட்நைட் படம். இந்தப் படத்தை விநாயக் சந்திரசேகரன் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் மணிகண்டன் மற்றும் மீதா ரகுநாத்தின் நடிப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இயல்பான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் மீதா ரகுநாத்.

முதல் நீ முடிவும் நீ படத்தின்மூலம் கடந்த 2022ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான மீதா ரகுநாத்திற்கு குட்நைட் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து.

இந்நிலையில் மீதாவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இவரது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. தன்னுடைய வருங்கால கணவருடன் மீதா எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. தனியாகவும் அவரது புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் திருமணம் நடைபெறும் திகதி அறிவிக்கப்படவுள்ள நிலையில் மீதாவிற்கு சமூக வலைதளங்கள் மூலமாக ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

முதல் நீ முடிவும் நீ மற்றும் குட்நைட் என இரு படங்களில் மட்டுமே நடித்துள்ள மீதா தற்போது திருமணம் செய்துக் கொள்ளவுள்ள நிலையில் அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.  குட்நைட் சிறந்த அங்கீகாரத்தை மீதாவிற்கு கொடுத்துள்ள நிலையில் அவர் தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.