லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்திருந்த படம் லியோ. அதேபோல் லோகேஷ் கனகராஜ் மன்சூர் அலிகானின் ரசிகர் என்பது அனைவரும் அறிந்தது. இந்நிலையில் லியோ படத்தில் மன்சூர் அலிகான் நடிப்பதற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தார் லோகேஷ் கனகராஜ்.

இந்நிலையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான் த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசினார். அவர் பேசுகையில், "த்ரிஷாவுடன் நடிக்கிறேன் என்று தெரிந்ததும் கண்டிப்பாக அவருடன் ஒரு பெட்ரூம் சீன் இருக்கும்; குஷ்பூ, ரோஜாவை கட்டிலில் தூக்கிப்போட்டது போல் அவரையும் தூக்கி போடலாம் என்று நினைத்தேன். இத்தனை வருடங்களில் சினிமாவில் நான் பண்ணாத அட்டூழியமா. ஆனால் காஷ்மீரில் த்ரிஷாவை எனது கண்ணிலேயே காட்டவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

மன்சூர் அலிகானின் இந்தப் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. த்ரிஷா இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "மன்சூர் அலிகான் என்னை பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோ ஒன்று எனது கவனத்துக்கு வந்தது. அவரது பேச்சினை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஆணாதிக்க மனநிலை மற்றும் அவமரியாதை செய்யும் விதம், பெண் வெறுப்பை பரப்பும் வகையிலும் அவரது பேச்சு இருக்கிறது. கேவலமான மனிதர்: என்னுடன் நடிக்க அவர் தொடர்ந்து ஆசைப்படட்டும். ஆனால் அவர் போன்ற ஒரு கேவலமான ஒரு மனிதருடன் நான் நடிக்கவில்லை என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இதற்கு மேலும் என்னுடைய கரியர் முழுவதும் அவருடன் நடிக்கமாட்டேன் என்பது உறுதி. இவரைப் போன்றவர்கள் ஒட்டுமொத்த மனித குலத்துக்கு இழுக்கு" என காட்டமாக பதிலடி கொடுத்திருக்கிறார்.