இலங்கை

உலக சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கையில் எரிபொருள் இருப்புக்களை முகாமை செய்வது மிகவும் முக்கியமானது என இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிபொருட்களின் விலை அதிகரித்த வண்ணம் இருந்த போதிலும் அரசாங்கம் மிகக் குறைந்த அளவிலேயே எரிபொருள் விலையை உயர்த்தியதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.