இலங்கை

இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் பாகிஸ்தானின் லாகூர் இடையில் விமான சேவைகளின் எண்ணிக்கையை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிகரித்துள்ளது.

அதன்படி, இன்று முதல் (31) வாரந்தோறும் ஞாயிறு, திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் விமான சேவைகள் இடம்பெறும் என விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

அதேவேளை , ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பாகிஸ்தானின் கராச்சிக்கு வாரந்தோறும் 4 விமான சேவைகளை இயக்குகின்ற நிலையில் லாகூ விமான சேவைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படவுள்ளது.