இலங்கை

இஸ்ரேலில் பணி புரியும் இலங்கையர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படும் எந்த சந்தர்ப்பத்திலும் அவர்களை நாட்டுக்கு அழைத்துவர நாங்கள் தயாராக இருக்கிறோம் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் ஹமாஸ் குழுவினருக்கிடையில் இடம்பெற்றுவரும் மோதலில் இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கை பெண் அனுலா வீரசிங்கவின் பூதவுடல் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.