இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் இலங்கைக்கான ஜேர்மன் கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் பிரதம பிரதிநிதி மேரி அன்டோனியா வொன் ஷொன்பெர்ன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்.

தடைகளை நீக்கி மற்றும் இருதரப்பு வர்த்தகத்தை ஊக்குவிப்பதன் மூலம் அந்நிய நேரடி முதலீட்டு நடவடிக்கைகளில் சிறப்பு கவனம் செலுத்தி, ஜேர்மன் வர்த்தக நிறுவனங்கள் இலங்கையில் முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குச் சாதகமான சூழலை உருவாக்குவது தொடர்பில் கவனம் செலுத்தி இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

சஜித்தை சந்தித்த ஜேர்மன் வர்த்தக துறையினர்  இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான ஜேர்மன் கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதிநிதிகளின் கூட்டாண்மை விவகாரங்கள் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு பிரதானி மலிந்த கஜநாயக்க மற்றும் தொடர்பாடல் முகாமையாளர் கேஷலா டயஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.