பிக் பாஸ் சீசன் 7 தற்போது ஒரு மாதத்தை கடந்துள்ளது. இதுவரை இந்த சீசனில் மூன்று போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில் தற்போது இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இரண்டு எலிமினேஷன் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

வழக்கமாக பிக் பாஸ் சீசன் துவங்கிய முதல் வாரத்தில் எலிமினேஷன் இருக்காது. ஆனால் இந்த சீசனில் முதல் வாரத்திலேயே எலிமினேஷனை வைத்து போட்டியாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஷாக் கொடுத்தது பிக் பாஸ்.இதைத்தொடர்ந்து பாவா செல்லத்துரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடரமுடியாது என கூறி தானாக வெளியியேறிவிட்டார்.

இதையடுத்து கடந்த வாரம் விஜய் வர்மா குறைவான வாக்குகளை பெற்று வெளியேறினார்.

இந்நிலையில் இந்த வாரம் போட்டியை விட்டு யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வருகின்றது. இதையடுத்து தான் பிக் பாஸ் இந்த வாரம் எலிமினேஷனில் ட்விஸ்ட் வைத்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. அதாவது இந்த வாரம் ஒன்று இல்லை இரண்டு எலிமினேஷன் என தகவல்கள் வருகின்றன. இந்த வாரம் வினுஷா தான் குறைவான வாக்குகளை பெற்றுள்ளார். அநேகமாக அவர் தான் வெளியேறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் அவருடன் இணைந்து மேலும் ஒரு போட்டியாளர் வெளியேற இருக்கின்றார் என தகவல்கள் வருகின்றன. ஆனால் இதில் எந்தளவிற்கு உண்மை இருக்கின்றது என தெரியவில்லை. அப்படி இரண்டு எலிமினேஷன் இருந்தால் அது போட்டியாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் செம ட்விஸ்ட்டாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மேலும் இந்த வாரம் வைல்ட் கார்டு எண்ட்ரியாக ஐந்து போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் நுழைய இருக்கின்றனர் என்றும் தகவல்கள் வருகின்றன. எனவே இனி பிக் பாஸ் வீட்டில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது என்றே தெரிகின்றது. இந்நிலையில் இந்த சீசனில் இரண்டு வீடு, எலிமினேஷன், காரசாரமான விவாதம் என அடுத்தடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுகொண்டு இருப்பது ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் வைக்கப்போகும் ட்விஸ்ட்; அதிர்ச்சியில் உறையப்போகும் ஹவுஸ்மேட்ஸ் - என்ன நடக்கபோகுதோ...!!