Breaking News

உலக வங்கியின் தலைவருடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு...!!

உலக வங்கியின் தலைவருடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு...!!

இலங்கை

 உலக வங்கியின் தலைவர் அஜய் பங்காவை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  சந்தித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

இந்த சந்திப்பு ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஐ.நா பொதுச் சபையின் அனுசரணையில் ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளுக்கான உச்சிமாநாட்டில் ரணில் விக்கிரமசிங்க இணைந்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இந்த மாநாடு நடைபெற்றுள்ளது.