நடிகர்கள் விஷால், எஸ்ஜே சூர்யா நடித்துள்ள மார்க் ஆண்டனி படம் நேற்றைய தினம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ரிலீசானது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் டைம் ட்ராவலை மையமாக கொண்டு வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரநிற்கு இந்தப் படம் சிறப்பாக கைக்கொடுத்துள்ள நிலையில், அடுத்ததாக மார்க் ஆண்டனி 2 படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே இந்தப் படத்திற்காக எஸ்ஜே சூர்யா கொடுத்துள்ள பேட்டியில், மார்க் ஆண்டனி 2 படத்திற்காக தான் காத்திருப்பதாகவும் விரைவில் இதற்கான ஸ்கிரிப்ட் பணிகளை படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மேற்கொள்வார் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ், தெலுங்கு மொழிகளில் இந்தப் படத்திற்காக தொடர்ந்து 25 நாட்கள் 22 மணிநேரங்கள் தான் டப்பிங் செய்த அனுபவத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.