தெலுங்கில் 2005ஆம் ஆண்டு அறிமுகமான அனுஷ்கா அருந்ததி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். மேலும் அறிமுகமான சில வருடங்களிலேயே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்ததன் மூலம் அவருக்கு பாராட்டும் கிடைத்தது. தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்தார். பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் இந்திய அளவில் ஹிட்டடித்தது.

இந்நிலையில் அனுஷ்கா ஆர்யாவுடன் இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்தார். அந்தப் படத்துக்காக உடல் எடையையும் கூட்டினார். ரொம்பவே டெடிகேஷனாக அந்தப் படத்துக்கு உழைத்தாலும் படம் எதிர்பார்த்த ரிசல்ட்டை கொடுக்கவில்லை. அதுமட்டுமின்றி ஏற்றிய உடல் எடையை குறைக்க முடியாமலும் திணறினார்.

இதன் காரணமாக அவருக்கு பட வாய்ப்புகளும் குறைய ஆரம்பித்தன. இந்த சூழலில் அனுஷ்கா தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார். அதன்படி மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது கடந்த 7ஆம் திகதி வெளியானது. ஜவானோடு ரிலீஸானதால் படம் அடி வாங்கிவிடுமோ என்ற எண்ணம்தான் ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் ஃபீல் குட் படமாக அந்தப் படம் அமைந்திருக்கிறது. இதன் காரணமாக செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பத்திலேயே அனுஷ்கா உற்சாகமாக இருக்கிறார்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்தது ஏன் என்பதற்கு தற்போது பதிலளித்திருக்கிறார் அனுஷ்கா. அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், "பாகுபலி படத்தி நடித்த பிறகு பாகமதி படத்தில் நடித்திருந்தேன். அந்த சமயத்தில் எனக்கு ஓய்வு தேவைப்பட்டது. அதனால் சில காலம் ஓய்வெடுத்தேன். எதிர்கால படங்களுக்கு என்னை தயார் செய்வதற்காகவும் அந்த ஓய்வு தேவைப்பட்டது. எனவே அந்த இடைவெளியில் எந்தப் படத்துக்கும் நான் ஒத்துக்கொள்ளவில்லை. இப்போது தொடர்ந்து கதைகளை கேட்டுவருகிறேன். நல்லதாக இருந்தால் எந்த மொழியிலும் நடிப்பேன்" என்றார்.