நடிகர் சிம்பு சமீபத்தில் பத்து தல படத்தில் கேங்ஸ்டராக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். முன்னதாக வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு மற்றும் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு படங்களும் சிம்புவிற்கு சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் சிம்பு.

கமல்ஹாசன் தயாரிப்பில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங்கிற்கு முன்னதாக வெளிநாட்டில் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியை மேற்கொண்டிருந்தார் சிம்பு. தொடர்ந்து உடல் எடையையும் குறைத்து ஸ்லிம்மானார். வரலாற்று பின்னணியில் உருவாகவுள்ள இந்தப் படத்திற்காக நீண்ட தலைமுடியையும் வளர்த்துள்ளார். இந்த புதிய லுக்குடன்தான் பத்து தல படத்தின் இசை வெளியீட்டிலும் அவர் கலந்துக் கொண்டார். இந்த லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. சமீப காலங்களாக உடல் எடை அதிகரித்து, தொப்பையுடன் காணப்பட்ட சிம்பு, சிறப்பான வகையில் தன்னுடைய உடல் எடையை குறைத்து பழைய லுக்குடன் உற்சாகத்துடன் காணப்பட்டார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புதிய படத்தில் மீண்டும் அவர் உடல் எடை கூடி காணப்படுகிறார். STR48 படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமியுடன் சிம்பு இணைந்துள்ள அந்த புகைப்படத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்லிம்மாக இருந்தது போல இல்லாமல் குண்டாக காணப்படுகிறார்.

இதனால் சிம்பு மீண்டும் குண்டாகிவிட்டார் என்றே கூறப்படுகிறது. தன்னுடைய படங்களுக்காக கடுமையாக உழைக்கும் நடிகர்களில் சிம்புவும் ஒருவர் என்பதால் படத்திற்காக மீண்டும் உடல் எடையை அவர் ஏற்றியுள்ளாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

நடிகர் சிம்பு தொடர்ந்து சிறப்பான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தொடர்ந்து இவரது படங்கள் ஹிட்டடித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது STR48 படத்தில் வரலாற்று கதைக்களத்தில் இணைந்துள்ளார். இந்தப் படத்திற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுத் தேர்ந்துள்ள சிம்பு, சிறப்பான படத்தை ரசிகர்களுக்கு கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம். இந்த படத்திற்காகத்தான் அவர் வெயிட் அதிகரித்துள்ளாரா என்ற கேள்வி தற்போது ரசிகர்களுக்கு மேலும் படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.