கடந்த ஆகஸ்ட் 22 ஆம் திகதி முதல் பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

தென் ஆப்பிரிக்காவில், பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்டு, பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பன்னாட்டு தலைவர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு கிரீஸ் நாட்டுற்கு புறப்பட்டுச் சென்றார்.

இதனையடுத்து கிரீஸ் நாட்டின் அதிபர் கேத்ரினா சகெல்லரோபவுலோ, கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடிக்கு கிரீஸ் நாட்டின் உயரிய விருதான 'கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர்' விருதை அந்நாட்டு அதிபர் கேத்ரினா வழங்கி கௌரவித்தார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்த விருது கிரீஸ் நாட்டு மக்கள் இந்தியாவின் மீது வைத்துள்ள மரியாதையின் அடையாளாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.