இந்தியா: தமிழ்நாடு

பேஸ்புக்கில் '100% சிரிப்பு இலவசம்' என்ற பக்கம் மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறது. அதில் நேற்று ஒரு மீம் ஒன்று வெளியானது.

"சண்டைபோட்டு பேசாமல் இருக்கும் காலம் போய், பேசினால் சண்டை வரும் என்று பயந்து பேசாமல் இருக்கும் காலத்தில் வாழ்கிறோம்" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மீமிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ப்ளூ டிக் கொண்ட அவரது அதிகாரப்பூர்வ பேஸ்புக் கணக்கில் இருந்து மூன்றே எழுத்துக்களில் கமெண்ட் செய்தது பலரை வியப்படையும், விவாதம் செய்யவும் வைத்து இருக்கிறது.

இந்த மீமில் சொல்லப்பட்டு இருக்கும் கருத்தை ஆமோதிக்கும் வகையில், "Yes" என ஆங்கிலத்தில் அவர் கமெண்ட் செய்து இருந்தார்.

அதற்கு கீழ் பலரும் வியப்படைந்து திருமாவளவனின் கமெண்டுக்கு பதிலளித்து இருந்தனர்.

நள்ளிரவு வரை இருந்த அந்த கமெண்ட் தற்போது பதிவில் இருந்து நீக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.