இலங்கை

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இலங்கை சுங்கப் பிரிவினரால் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர் வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய போது 3.6 கிலோ தங்கத்துடன் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

மீட்கப்பட்ட தங்கத்தின் பெறுமதி  7.4 கோடி ரூபாய் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் போது 42 இலட்சம் ரூபாய் பெறுமதி மிக்க 91 ஸ்மார்ட் போன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.