விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த போடா போடி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது...

பாய்ஸ் படத்தில் ஜெனிலியா ரோலில் நடிப்பதற்காக ஷங்கர் சாரிடம் இருந்த அழைப்பு வந்தது. ஆனால், அப்பா அப்போது நடிக்க அனுமதிக்கவில்லை. ஆடிஷன் ஸ்க்ரீனிங் டெஸ்ட் என அனைத்தும் முடிந்துவிட்டது என மிகவும் ஆசையாக இருந்தது. ஆனால் அப்பா சம்மதிக்கவில்லை.

அதன் பிறகு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் சூப்பர் ஹிட் வெற்றி படமான 'காதல்' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது அதையும் அப்பா வேண்டாம், படிப்பு முடிந்ததும் நடிப்பதை பற்றி யோசிக்கலாம் என்றார். இதனால் பல நல்ல படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்தேன் என்று நடிகை வரலட்சுமி கூறியுள்ளார்.